Thursday, 23 December 2010

Vijay Will Act in Pagalavan Sure ?

தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும் சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார். .இதுகுறித்து இயக்குநர் சீமான், ‘’நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்’’என்று தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளர் தாணு, ‘’சச்சின் படத்திற்கு பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்திற்கு பகலவன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment