Tuesday, 7 December 2010
ரத்தச் சரித்திரம் செத்தச்சரித்திரம் ஆகிவிட்டது ?
தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள்
கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.
இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் கட்சி தயாரிபாளரான துரை.தயாநிதிக்கு விற்று விட்டார்
ஏற்கனவே அந்தத் தயாரிப்பாளர் நம்பி வாங்கிய வ குவாட்டர் கட்டிங் படம் வாஷ் அவுட் ஆனதில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார் - இப்போது அந்த நஷ்டத்தை மேலும் இரண்டு மடங்காக உயர்த்தி விட்டது ரத்தசரித்திரம். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரத்தசரித்திரம் படத்துக்கு முதல் இரண்டு காட்சிகள் மட்டுமே ஓபனிங்காக இருந்தது. அதன்பிறகு மூன்றாவது காட்சியில் தொடங்கி தியேட்டர்கள் காத்து வாங்க ஆரம்பித்து விட்டன என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
ரத்தசரித்திரம் மண்ணைக் கவ்வியதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள். ரத்தச்சரித்திரம் வெளியானது இயற்கைக்கே பிடிக்கவில்லை. கடந்த இருபது நாட்களாக தமிழகத்தில் பதினைந்துக்கும் அதிகமான மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது மழை. இரண்டாவது காரணம் மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும் ரத்தச் சரித்திரம் செத்தச்சரித்திரம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் படத்தைப் பார்த்துச் சென்ற ரசிகர்களின் மவுத்டாக். இத்தனை கொடுமையான வன்முறைக் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லாததால் படம் கொடுமை என்று சொல்லிச்சென்றதால் மழை இல்லாத மாவட்டங்களிலும் வாஷ் அவுட். மூன்றாவதாக நாம் தமிழர் இயக்கத்தினர் விநியோகித்த ‘ ஏன் ரத்தசரித்திரம் தமிழர்கள் புறகணிக்க வேண்டிய திரைப்படம்?’ என்ற பத்து லட்சம் துண்டுப் பிரசுரங்கள் தமிழம் முழுவதும் விநியோகிகப்பட்டதோடு, இதே விஷயத்தை எட்டு லட்சம் கல்லூரி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியது என்று மூன்றாவது காரணத்தைச் சொல்கிறார்கள்.
எல்லாம் போகட்டும்! தமிழர்களுக்கு ஈழத்தில் ஏற்பட்ட இழப்பை பற்றிக் கவலைப்படாத சூரியா, ரத்தசரித்திடம் மூலம் தயாரிபாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட துரைதயாநிதி தயாரிக்கும் படம் ஒன்று 2012-ல் கால்ஷீட் கொடுத்து விட்டாரம். சூரியா கால்ஷீட் கொடுத்த பிறகே சமாதனம் ஆனாராம் புதுமாப்பிள்ளை துரை. தயாநிதி!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment