Wednesday, 29 December 2010

Sun TV Buy Kavalan Television Rights ?

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment