Friday, 10 December 2010

உதயநிதியின் கட்டுப்பாட்டில் உலக நாயகன் ?

சின்னப் பையன் உடுக்கைக்கு ஊரே சாமியாடுச்சாம். அந்த மாதிரியிருக்கு இந்த செய்தியும். கோலிவுட்டின் மிகப்பெரும் புள்ளிகளுள் உலகநாயகன் கமல்ஹாசனும் ஒருவர். ஒவ்வொரு முறை அவரது படம் வெற்றியடையும் போதும், மிகப்பெரிய அளவில் கமல் வசூலினை அள்ளி விடுவார். இதன் காரணமாக கமல்ஹாசனுக்கு கிட்டதட்ட அனைத்துத் தயாரிப்பாளர்களுமே முழு சுதந்திரம் வழங்கிவிடுவார். ஆனால், இம்முறை உதயநிதி ஸ்டாலின் உலகநாயகனையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். கமல்ஹாசனை பின்னுக்குத் தள்ளி, 'மன்மதன் அம்பு' திரைப்படத்தின் அனைத்து முடிவுகளையும் உதயநிதியே எடுத்தாராம். கமல், தனது 'மர்மயோகி'யையே படமாக்க விரும்பினாராம். ஆனால் உதயநிதிதான் 'மன்மதன் அம்பு'வைத் தேர்ந்தெடுத்து படமாக்க வைத்தாராம். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் படத்தை முடித்துத் தரவேண்டும் என்று காலக்கெடுவும் விதித்தாராம். தனது படத்தின் விநியோகிஸ்த நடவடிக்கைகளில் கூட தலையிடும் கமல், இம்முறை எதுவும் பேசவில்லையாம். உதயநிதி படத்தை வேகமாக முடித்துத் தர வேண்டும் என்று கூறியதாலேயே, கே.எஸ்.ரவிக்குமார் விரைவாக இபடத்தை முடித்து வெளியீட்டுக்கும் தயாராக்கியிருக்கிறார். உதயநிதி எதிர்பார்த்தபடி படமும் டிசம்பர் 17ல் திரைக்கு வரவுள்ளது. சின்ன 'அம்பு' ஊடுருவியதாம் 'வைரம் பாஞ்ச கட்டை'யை...!!!

No comments:

Post a Comment