![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw2FzrUAnHtNf4OgQa-pdPnywpUOqAgEyZaUvIMutwH1PKyJJAkiLWC77tMAh7BV_G6CssUKAN9I-PJ8hnveU0LGcFbLVzA-0Xa6dp0G4btjAfUDf6yEBEtQ4oKY1MdO4FN_dzGyj5u04/s1600/Vikram.jpg)
தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து, "சீயான்" விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. படத்திற்கு "வேந்தன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment