Thursday, 3 June 2010

Singam Movie Review

நீங்க இயக்குனர் கஜேந்திரனின்/ராம நாரயணனின் லாஜிக் இல்லாத காமெடியின் தீவிர ரசிகரா? அப்ப இந்த படம் உங்களுக்கு தான்...படத்துல சூர்யா ஒரு சூப்பரோ சூப்பர் போலீஸ், நம்ம கேப்டன் மாதிரி இவரை விட்டா தமிழ்நாட்ல சட்டம் ஒழுங்கை காப்பாத்த வேற யாருமே இல்ல.. படத்தோட ஆரம்பத்துல எஸ்.ஜ, இண்டரவெலில் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நேரம் கழிச்சி AC. இவரு போவுற ஸ்பீடை பாத்து படம் முடியும் பொழுது டிஜஜியோ இல்ல முப்படை தளபதியாவோ ஆயிடுவாருன்னு வடை பெட் கட்டுனேன்.. பச்ச் வட போச்சி.

வட போனது போனது தான் கதையாவது பாப்போம்..சூர்யா ஒரு சூப்பர் போலிஸ், பிரகாஷ்ராஜ் சென்னையை கண்ட்ரோல் பண்ற வில்லன். சென்னையில் நடந்த ஒரு கொலை/தற்கொலைக்கு US Embassy, FBI, CBI கிட்ட இருந்து வருகிற பிரஷரால, பிரகாஷ் ராஜ் சென்னையில கைது பண்ணி தூத்துக்குடிக்கு பக்கத்துல ஒரு குக்கிராமத்துல, சூர்யா எஸ்.ஜயாக இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல போயி ஜாமின் கையெழுத்து போட சொல்றாங்க.இப்படி பண்ணா, சும்மா இருக்குற நானே காண்டு ஆவேன் எவ்வுளவு பெரிய ரவுடி அவரு அவர் காண்டாவாம இருப்பாரா?

இது தெரியாம் நம்ம ரூல்ஸ் ரூலாயுதம் சூர்யா சவுண்டு விட்டு சும்மா இருக்குற பிரகாஷ்ராஜ்ஜை உசுப்பேத்தி.பிரகாஷ்ராஜ் காண்டாகி நம்ம ஏரியாவுக்கு இவனை கூட்டிட்டு போயி தட்டி ஜூஸ் புழியலாமுன்னு நெனைச்சி.சூர்யாவை சென்னைக்கு ப்ரோம்ஷன் கம் டிரான்ஸ்பர் குடுத்து, கூப்பிட்டுகிட்டு வந்து சொந்த செலவுல சூனியம் வெச்சிகிறாரு.அம்முட்டு தான் கதை.

முதல் பாதியில உள்ளூருல பறந்து பறந்து சண்டை போடுறாரு, வழக்கம் போல பாட்டி வீட்டுக்கு வருகிற அனுஷ்காவோட பொருட்களை எல்லாம் ப்ரில்லியண்டா கண்டுபிடிச்சி குடுக்குறாரு, வீர வீரமா வசனம் பேசி நம்மளையும் கொல்றாரு. சரி கருமம் இடைவேளைக்கு அப்புறமாவது ஏதாவது செய்வாருன்னு பாத்தா. சென்னைக்கு போயி கேமிரா ஆட ஆட ஜிப்சி ஜீப்புல இங்குட்டும் அங்குட்டும் போறாரு, ஏழு அடிக்கு பாய்ந்து மூஞ்சை சிங்கம் மாதிரி மாத்திகிட்டு கடிக்கிறாரு சே அடிக்கிறாரு..

இவர் தான் இப்படி பிரகாஷராஜ்ஜாவது ஏதாவது பண்ணுவாருன்னு பாத்தா சூர்யாவுக்கு குடைச்சல் குடுக்குறேன்னு அவர் வூட்டு கண்ணாடியை ஆள் வெச்சி உடைக்கிறாரு. கொலை நடக்குதுன்னு போன் போட்டு ஜுன் மாசத்துல ஏப்ரல் பூல் பண்றாரு. கதை கேக்குற நமக்கே கடுப்பாவது பாவம் சூர்யா ஆவாரா இல்லையா? அங்க அனுஷ்கா குடுக்குறாங்க பாருங்க ஒரு motivation talk..அதைக்கேட்ட எனக்கே IPS பாஸாகி வடை சே ரவுடிங்களை சுடனுமுன்னு தோணிச்சி..(அனுஷ்கா மாதிரி ஒரு பிகர் சொன்னா IPS என்னாங்க GPSயே பாஸ் பண்ணலாம்).

படம் தான் இப்படி காமெடியாகிப்போச்சேன்னு க்ளைமேக்ஸாவது கொஞ்சம் ரிச்சா இருக்குமுன்னு பாத்தா. ஏதோ பொத்தண்ணாங்கிறாரு ஊரே அவர் கண்ட்ரோல்ங்கிறாங்க, ஊரை காலி பண்ணிட்டேன்னு சொல்றாரு...கடசியில ஒரு 4-5 ஸ்கோல் பசங்களை அடிச்சிப்போட்டுட்டு பிரகாஷ்ராஜ்ஜை வட சுட்றமாதிரி சுட்டுட்டு ரயிலேறிவந்து மெடல் வாங்கிட்டு ஊரைப்பாக்க கிளம்ப்பிடுறாரு சூர்யா.

படத்தோட இன்னொரு கொடுமை நம்ம தேவரய்யா விவேக்கு, காக்கா மட்டும் இவரை கொத்தியிருந்தா இவர் தலையில இருந்து ஒரு இன்சி அளவுக்கு தண்ணி வந்து இருக்கும்.இவர் போவுற ஸ்பீடை பாத்தா வெ.மூர்த்தியே தேவலாம் போல.

இவ்வுளவு கொடுமையை கூட பொறுத்துகலாமுங்க ஆனா படத்துக்கு நடு நடுவே அஜீரனக்காரனோ இல்ல வாயூகோளாரு காரனோ வந்து சிங்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு சவுண்டு குடுக்குறான் பாருங்க பொறுக்க முடியலை.

இதை எல்லாத்தையும் தாண்டி படத்தை பாக்க ஒரே காரணம் அனுஷ்கா தான்..வயசானலும்..சும்மா..எந்த ஆங்கிளில் பாத்தாலும் அழகா இருக்காங்க..சும்மா மெயிண்டென் பண்ணுவாரா நாகார்ஜுன்.

எனக்கு என்னவோ நகுலுக்கு போட்டியா இருக்குற சூர்யாவையும் விஜய்யையும் ஒழிக்க சன் பிக்‌சர்ஸ் ப்ளான் பண்றாங்களோன்னு தோணுது.

கேபிள்ஜி படம் ஸ்பீடா இருக்குன்னு சொல்லி உசுப்பேத்தி அநியாயமா ஜந்து உசுரை கொல்லப்பாத்தீரே இது நியாயமா சாமி?

No comments:

Post a Comment